புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில் சர்வதேச சந்தையில் வியாழக்கிழமை (29) தங்கம் அதன் அனல் பறக்கும் விலை ஏற்றத்தை நீடித்தது.
அதன்படி, வியாழக்கிழமை காலை ஆரம்ப வர்த்தகத்தில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 5,600 அமெரிக்க டொலர்கள் என்ற சாதனையை எட்டியது.
அதே நேரத்தில் வெள்ளி 120 அமெரிக்க டொலர்களை தாண்டியது.
திங்களன்று முதல் முறையாக தங்கத்தின் விலை 5,000 அமெரிக்க டொலர்களை விஞ்சியது, மேலும் இந்த வாரம் இதுவரை 10% க்கும் அதிகமாக விலை உயர்ந்துள்ளது.
வலுவான பாதுகாப்பான புகலிட தேவை, உறுதியான அமெரிக்க மத்திய வங்கி கொள்முதல் மற்றும் பலவீனமான டொலர் உள்ளிட்ட பல காரணிகளால் இந்த விலை ஏற்றத்துக்கு வழிவகுத்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
2025 ஆம் ஆண்டில் 64% ஏற்றத்தைத் தொடர்ந்து இந்த ஆண்டு தங்கம் 27% க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
இலங்கை நிலவரம்;
கொழும்பு, செட்டியார் தெருவின் தங்க விலைகளுக்கு அமைவாக இலங்கையில் இன்று (29) 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலையானது 420,000 ரூபாவாக காணப்படுகிறது.
அதேநேரம், 22 கரட் தங்கத்தின் விலையானது 386,400 ரூபாவாக காணப்படுவதாக அகில இலங்கை நகைகள் விற்பனையாளர் சங்கப் பொதுச் செயலாளர் ஆர்.பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.















