தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள சீரம், ஸ்பூட்னிக், பைசர், சினோபோர்ம் மற்றும் ஜோன்சன் அண்ட் ஜோன்சன் போன்ற நிறுவனங்களுடன் கலந்துரையாடியுள்ளதாக அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
அதன்படி 200,000 ஸ்பூட்னிக் வி தடுப்பூசிகள் இந்த மாத இறுதிக்குள்ளும் மே மாதத்தில் மேலும் 400,000 டோஸ்கள், ஜூன் மாதத்தில் 800,000 மற்றும் ஜூலை மாதத்தில் 1.2 மில்லியன் தடுப்பூசிகள் ரஷ்யாவிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்படும் என்றும் அவர் கூறினார்.
இதேவேளை ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் மொத்தம் 35,000 டோஸ், ஜூன் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையில் 105,000 டோஸ் பைசர் தடுப்பூசிகளை இலங்கை பெற்றுக்கொள்ளும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், உலக வங்கியின் நிதி உதவியுடன் ஒக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடையில் மேலும் 4.5 மில்லியன் டோஸ் பைசர் தடுப்பூசி கிடைக்கப்பெறும் எனவும் வைத்தியர் பிரசன்ன குணசேன கூறினார்.
அத்தோடு ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் அரச நிதி உதவியுடன் மற்ற தடுப்பூசிகள் பெற்றுக்கொள்ளப்படும் என்றும் இவைக்கு மேலதிகமாக, உலக சுகாதார ஸ்தாபனம் நாட்டின் மூன்றில் ஒரு பங்கிற்கு போதுமான தடுப்பூசிகளை அனுப்பும் என்றும் அவர் குறிப்பிட்டார்.