நாட்டுக்குள் நுழைவதற்கான எல்லைக் கட்டுப்பாடுகள் ஏதும் விதிக்கப்படவில்லை என்றும் அவ்வாறு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருவதைத் தடுத்தால் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஆகவே சுற்றுலாப் பயணிகள் தொடர்ந்து நாட்டிற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் இலங்கையர்கள் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்புவார்கள் என்றும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
அவர்கள் நாட்டிற்குள் நுழையும்போது கடுமையான சுகாதார நடைமுறைகள் அமுல்படுத்தும் செயற்பாடு தொடரும் என்றும் அவர் கூறினார்.
அதன்படி கட்டுநாயக்க விமான நிலையத்தில் பி.சி.ஆர். பரிசோதனை நடவடிக்கை இடம்பெறும் என்றும் அதில் தொற்று உறுதி செய்யப்பட்டால் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
கடந்த சில நாட்களாக நாட்டிற்கு திரும்பிய இலங்கையர்களிடையே பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என குறிப்பிட்ட அமைச்சர், இலங்கை தற்போது ஆபத்தான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளது என்றும் கூறினார்.