ஸ்டெர்லைட் ஆலையை ஓக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் மீண்டும் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்தியாவில் ஒக்சிஜன் பற்றாக்குறை நிலவுகின்ற நிலையில், ஸ்டெர்லைட் ஆலை மூலம் ஒக்சிஜன் உற்பத்தியை மேற்கொள்வதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்து ஆலோசனை செய்ய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.
இதையடுத்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஒக்சிஜன் உற்பத்திக்காக தற்காலிகமாக 4 மாதங்களுக்கு திறக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உற்பத்தி செய்யப்படும் ஒக்சிஜன் விநியோகத்தில் தமிழகத்துக்கே முன்னுரிமை வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஸ்டெர்லைட் ஆலையை கண்காணிக்க தூத்துக்குடி ஆட்சியாளர் தலைமையில் குழு அமைக்கப்படும் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
எவ்வாறிருப்பினும் ஸ்டெர்லைட் ஆலையில் தாமிர உற்பத்தி உட்பட எவ்வித உற்பத்தி அலகையும் திறக்க, இயக்க அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.