தொழிலாளர் உரிமைகளை பாதுகாப்பதில் நாங்கள் உறுதியாகவே இருக்கின்றோமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த வாழ்த்துச் செய்தியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளதாவது, “கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த வருடத்தினைப்போன்று இம்முறையும் சர்வதேச தொழிலாளர் தினத்தை கூட்டங்கள் மற்றும் பேரணிகள் இன்றி கொண்டாட வேண்டிய நிலைமையில் நாம் அனைவரும் இருக்கின்றோம்.
ஆகவே நாட்டிலுள்ள தொழிலாளர்கள் அனைவரும், சுகாதார நடைமுறைகளை பின்பற்றி புதிய முறையில் மே தினத்தை கொண்டாடுவார்கள் என எதிர்பார்க்கின்றோம்.
‘மக்கள் நலன் சார்ந்த பணியிடம் பாதுகாப்பான தேசம்’ என்ற தொனிப்பொருளினை முன்னிறுத்தி , தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு இன்று முதல் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம்.
மேலும் தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாப்பதில் நாம் தொடர்ந்து உறுதியாகவே இருக்கின்றோம்” என பிரதமர் மஹிந்த, தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.