இடுகம நிதியத்தில் உள்ள 1360 மில்லியனை கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்வதற்கு பயன்படுத்தும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு எதிர்க்கட்சி பாராட்டு தெரிவித்துள்ளது.
இன்று (செவ்வாய்க்கிழமை) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய போதே நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் இதனைத் தெரிவித்தார்.
குறித்த நிதியத்தின் தற்போதுள்ள 1,360,922,969.24 இருப்பை தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு நேற்று அறிவித்திருந்தது.
இந்நிலையில் குறித்த நிதியத்தில் உள்ள பணத்தை ஒருவருடத்தின் பின்னர் அரசாங்கம் கொரோனா தடுப்பூசி கொள்வனவிற்காக செலவிடவுள்ளதாகவும் எஸ்.எம்.மரிக்கார் குறிப்பிட்டார்.