இலங்கையில் இன்று (வியாழக்கிழமை) நள்ளிரவு முதல் அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று இரவு 11 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 04 மணி வரையான காலப் பகுதியில் வர்த்தக நிலையங்களை திறப்பதற்கு அனுமதி இல்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
நாடளாவிய ரீதியில் பயணத் தடை அமுலில் இருக்கும்போது அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
மருத்துவத்திற்கான இணைய விநியோக சேவை செயற்பட அனுமதிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இதேவேளை, அத்தியாவசியமற்ற இயக்கங்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய அடையாள அட்டை நடைமுறை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் செயற்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.