காஸாவிலிருந்த கொரோனா பரிசோதனை நிலையம் தாக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உலகில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகமாகவுள்ள இடங்களில் காஸாவும் ஒன்று.
மக்கள் தொகையில் 28 சதவீதமானவர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இஸ்ரேலுக்கும் பலஸ்தீன ஆயுதக் குழுக்களுக்கும் இடையிலான பூசலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இராஜதந்திர ரீதியிலான முயற்சிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே, போராளித்துவ இலக்குகளைக் குறிவைத்து தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்படும் என இஸ்ரேலியப் பிரதமர் தெரிவித்துள்ளார்.
கிழக்கு ஜெருசலேமில் இஸ்ரேலியர்களுக்கும் பலஸ்தீனர்களுக்கும் இடையே யுத்தம் ஏற்பட்டுள்ளமையினையடுத்து இஸ்ரேல் மீது ஹமாஸ் இயக்கம் எறிகணைகளை வீசி தாக்குதல் மேற்கொண்டது.
இதற்கு பதிலடி கொடுக்க காஸா பகுதியில் 8 நாட்களுக்க முன்னர் இஸ்ரேல் வான்வெளி தாக்குதல்களை ஆரம்பித்தது என்பதுக் குறிப்பிடத்தக்கது.