தமிழர்களுக்கும் கிடைக்க வேண்டிய அதிகாரங்களை பகிர்ந்தளித்திருந்தால் இலங்கையில் இரத்த ஆறு ஓடியிருப்பதை தடுத்திருக்க முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இவ்வாறு கூறினார்.
சீனாவிற்கு அதிகாரங்களை வழங்கும் வகையில் துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு ஊடாக நடவடிக்கை எடுத்ததை போல அன்று தமிழர்களுக்கு அதிகார பகிர்வினை வழங்க எதாவது நடவடிக்கை எடுத்திருக்கலாம் என்றும் குறிப்பிட்டார்.
ஆனால் அன்று அஹிம்சை ரீதியாக போராடியவர்களையும் ஆயுத ரீதியாக போராடியவர்களையும் அடக்கி ஒடுக்கி பயங்கரவாதிகள் மற்றும் பிரிவினை வாதிகள் என அரசாங்கம் முத்திரை குத்தியது என்றும் செல்வம் அடைக்கலநாதன் குற்றம் சாட்டினார்.