மன்னார் மாவட்டத்தில் 4ஆவது கொரோனா மரணம் இன்று (புதன்கிழைமை) பதிவாகியுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் உறுதிபடுத்தியுள்ளார்.
கொரோனா தொற்றுக்கு உள்ளான திருக்கேதீஸ்வரத்தைச் சேர்ந்த 64 வயதுடைய ஆணொருவர் கடந்த ஒரு வாரமாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் செயற்கை சுவாச கருவியின் உதவியுடன் சிகிச்சைப் பெற்று வந்தார்.
இந்த நிலையிலேயே அவர் இன்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார் என மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.
அவருடைய மரணத்திற்கு கொரோனா தொற்றுடன் ஏற்பட்ட நிமோனியா காய்ச்சலே காரணம் ரி.வினோதன் மேலும் தெரிவித்தார்.