ஜப்பானில் நடைபெற்று வரும் 5 ஆவது ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், பெண்களுக்கான T47 200 மீட்டர் ஓட்டப்பந்தய பிரிவில் இலங்கையின் தனஞ்சனா விக்ரமசிங்க வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.
அவர் பந்தய தூரத்தை 25.80 வினாடிகளில் நிறைவு செய்து இரண்டாம் இடத்தை பிடித்தார்.
இதன் மூலம், இப்போட்டிகளில் இலங்கையின் பதக்கப் பட்டியலில் மேலும் ஒரு பதக்கம் சேர்க்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஆண்களுக்கான நீளம் பாய்தல் T47 பிரிவில் இலங்கையின் மொஹமட் சஃப்ரான் வெண்கலப் பதக்கத்தை வென்றமையும் குறிப்பிடத்தக்கது.















