இந்திய விக்கெட் காப்பாளரும், துடுப்பாட்ட வீரருமான சஞ்சு சாம்சன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீதான தனது அபிமானத்தை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளார்.
அவர் தனது மனைவி மற்றும் நண்பர்களுடன் இணைந்து ரஜினிகாந்தின் அண்மைய திரைப்படமான ‘ஜெயிலர் 2’-ஐப் பார்ப்பதற்காக ஒரு திரையரங்கம் முழுவதையும் முன்பதிவு செய்துள்ளார்.
ரஜினிகாந்தின் திரைப்படங்கள் மீது தனக்குள்ள ஈடுபாடு குறித்து பலமுறை வெளிப்படையாகப் பேசியுள்ள சாம்சன், படம் வெளியான நாளில் அதைப் பார்க்கும் வாய்ப்பைத் தவறவிட்ட நிலையில், தற்போது திரையரங்கில் அந்தப் படத்தைப் பார்ப்பதில் மிகுந்த உற்சாகமடைந்தார்.
டெல்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டியிருந்ததால், அவரால் முன்னதாக அந்தப் படத்தைப் பார்க்க முடியாமல் போனது.
இருப்பினும், அந்தத் தாமதத்தை ஈடுசெய்யும் வகையில் அவர் இப்போது படத்தைப் பார்த்தார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர்,
எனக்கு ரஜினி சார் படங்களைப் பார்ப்பது மிகவும் பிடிக்கும், அவருடைய அடுத்த படத்திற்காக நான் எப்போதும் ஆவலுடன் காத்திருப்பேன்.
அதனால், நான் ஒரு நாள் தாமதமாகிவிட்டேன்.
அவருடைய படங்களை என்னால் முடிந்தவரை அதிகம் பார்க்க முயற்சிப்பேன்.
நேற்று (நேற்று முன்தினம்) டெல்லியில் ஒரு நிகழ்ச்சி இருந்ததால், என்னால் படத்தைப் பார்க்க முடியவில்லை.
ஆனால் இன்று (நேற்று), அதிர்ஷ்டவசமாக, முழு திரையரங்கையும் என்னால் முன்பதிவு செய்ய முடிந்தது.
என் நண்பர்களை அழைத்திருக்கிறேன், என் மனைவியும் வந்திருக்கிறார்.
ரஜினி சாரை பெரிய திரையில் பார்ப்பதில் நான் மிகுந்த உற்சாகமாக இருக்கிறேன் – என்று கூறினார்.
தமிழ் தெரிந்த இந்திய அணியின் உதவியாளர் குழு உறுப்பினர்களும் இந்தத் திரையிடலில் கலந்துகொள்ளவிருப்பதாக சாம்சன் தெரிவித்தார்.
இதன் மூலம், தமிழ் மொழியின் மீதும் அதன் திரைப்படங்களின் மீதும் அவருக்கும் அவர்களுக்கும் இருக்கும் பொதுவான ஆர்வத்தைப் பகிர்ந்துகொள்ளும் ஒரு குழு நிகழ்வாக இது அமையவுள்ளது.
தனியார் திரையிடலுக்கு ஏற்பாடு செய்த சாம்சனின் இந்த முடிவு, அந்த மூத்த நடிகரின் மீது அவர் கொண்டுள்ள மிகுந்த மரியாதையை வெளிப்படுத்துகிறது.
அந்த நடிகரின் திரைப்படங்கள் பல தலைமுறைகளாக ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வந்துள்ளன.
ரஜினிகாந்தின் பிரம்மாண்டமான திரை ஆளுமை, தனித்துவமான பாணிகள் மற்றும் மக்கள் மத்தியில் அவருக்கு இருக்கும் அபரிமிதமான செல்வாக்கு ஆகியவை, அவரது திரைப்பட வெளியீடுகளை, குறிப்பாக தமிழ்நாட்டில், ஒரு முக்கிய நிகழ்வாக மாற்றியுள்ளன.
சாம்சனைப் பொறுத்தவரை, இந்தத் திரையிடல், தனக்கு நெருக்கமானவர்களுடன் இணைந்து திரைப்படத்தை ரசிப்பதற்கும், அதே வேளையில் சூப்பர் ஸ்டார் மீதான தனது நீண்டகால அபிமானத்தை வெளிப்படுத்துவதற்கும் ஒரு வாய்ப்பாக அமைந்தது.
கிரிக்கெட் வீரரின் இந்தச் செயல், ரஜினிகாந்தின் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனெனில், இந்த ஐகானிக் நடிகரின் ஒவ்வொரு புதிய படத்திற்காகவும் அவரது ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.
















