கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தின் மூன்றாவது வாசிப்பு 91 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
குறித்த சட்டமூலத்துக்கு ஆதரவாக 149 வாக்குகளும் எதிராக 58 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.
குறித்த சட்டமூலம் மீதான விவாதம் சபையில் நேற்றும் இன்றும் நடைபெற்ற நிலையில், ஐக்கிய மக்கள் சக்தி வாக்கெடுப்புக்கு கோரிக்கை விடுத்தது.
இதையடுத்து, இன்று சட்டமூலத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது.
இந்நிலையில், இடம்பெற்ற இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 89 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. ஆதரவாக 148 வாக்குகளும் எதிராக 59 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
அதைத் தொடர்ந்து மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் 91 மேலதிக வாக்குகளால் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதன்போது, சட்டமூலத்துக்கு ஆதரவாக 148 வாக்குகளும், எதிராக 59 வாக்குகளும் கிடைத்துள்ளன.
இதன்போது, எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசைப் பிரதிநிதித்துவப்படுத்தும் (ரிஷாட் கட்சி) ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் ஆகியோர் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.