வவுனியா- புளியங்குளம் சதுப்புநில பகுதியில், காயமடைந்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த யானை மேற்பரப்பிற்கு கொண்டு வரப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது.
கடந்த 14 ஆம் திகதி புளியங்குளம்- புதூர் காட்டு பகுதியில் துப்பாக்கி சூட்டில் காயமடைந்த 12 வயது மதிக்கத்தக்க யானைக்கு வனஜீவராசிகள் திணைக்களத்தினர், இராணுவத்தினர், அப்பிரதேச மக்கள் ஆகியோரின் உதவியுடன் வனஜீவராசிகள் திணைக்களத்தினரின் கால்நடை வைத்தியர் இணைந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
11 நாட்களாக சதுப்பு நிலத்தில் இருந்த யானை, வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், வன்னி பாதுகாப்புப் படைகள் மற்றும் மக்கள் ஆகியோர் இணைந்து மேற்கொண்ட முயற்சியில் நிலத்தின் மேற்பரப்புக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டு வரப்பட்டிருந்து.
இந்நிலையில் குறித்த யானையை விரைவாக குணப்படுத்த மாற்றுவழி என்ன என்பது தொடர்பாக ஆராயப்பட்டு வருவதாகவும் கால்நடை வைத்தியர் தெரிவித்துள்ளார்.