இலங்கையில் நேற்றைய தினம் 5ஆயிரத்து 192 பேருக்கு அஸ்ட்ரா செனகா தடுப்பூசியின் இரண்டாம் டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
இதனையடுத்து, இதுவரையில் 9 இலட்சத்து 25 ஆயிரத்து 242 பேருக்கு அஸ்ட்ரா செனகா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதோடு, அவர்களில் 3 இலட்சத்து 30 ஆயிரத்து 988 பேருக்கு இரண்டாம் டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக அந்தப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேநேரம், 5 இலட்சத்து 14 ஆயிரத்து 259 பேருக்கு சினோபாம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதோடு, அவர்களில் 2 ஆயிரத்து 435 பேருக்கு டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக அந்தப் பிரிவு தெரிவித்துள்ளது.