அநுராதபுரம் புனித பூமியில் பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபர் ஒருவர் ஹெரோயின் மற்றும் கஞ்சா போதைப்பொருட்களைப் பயன்படுத்தியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அநுராதபுரம் புனித பூமியில் இடம்பெற்ற சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வணக்கத்திற்குரிய பலாங்கொடை கஸ்ஸப தேரருடன் சென்றிருந்தபோதே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அநுராதபுரம் ருவன்வெலிசாய தூபிக்கு அருகில் பௌத்த பிக்குகளுக்கும் பொலிஸாருக்கும் இடையில் அண்மையில் ஏற்பட்ட முறுகல் நிலை தொடர்பில் இரு பொதுமக்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
அநுராதபுரம் புனித பூமி அபிவிருத்தித் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பௌத்த பிக்குகள் முன்னெடுத்த சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களையும், அவர்களுக்கு ஆதரவாகச் செயற்பட்ட பொதுமக்களையும் அங்கிருந்து அகற்ற பொலிஸார் முயன்றபோது இந்த முறுகல் நிலை ஏற்பட்டது.
இதன்போது பொலிஸாருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையில் மோதல் நிலை உருவானமை குறிப்பிடத்தக்கது.













