நாட்டில் மேலும் 7,546 பேருக்கு கொரோனா தடுப்பூசி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) செலுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி 5,192 பேருக்கு கோவிஷீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸும் 2,354 பேருக்கு சினோபோர்ம் தடுப்பூசியின் முதல் டோஸும் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, இலங்கையில் மொத்தம் 330,988 பேருக்கு இதுவரை கோவிஷீல்ட் தடுப்பூசியின் இரண்டு டோஸும் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை 514,259 பேருக்கு சினோபோர்ம் தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ள அதே நேரத்தில் ஸ்பூட்னிக்-வி தடுப்பூசியின் முதல் டோஸ் இதுவரை 14,984 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.