• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
எந்தவொரு நாட்டுத் தலைவரும் மக்கள் மீது இவ்வாறு வரி சுமத்தியதில்லை – ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன குற்றச்சாட்டு!

எந்தவொரு நாட்டுத் தலைவரும் மக்கள் மீது இவ்வாறு வரி சுமத்தியதில்லை – ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன குற்றச்சாட்டு!

No other head of state has ever imposed such taxes on the people – Sri Lanka Podujana Peramuna’s accusation!

Puja Gnanamurthy by Puja Gnanamurthy
2026/11/02
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
969
VIEWS
Share on FacebookShare on Twitter

எந்தவொரு நாட்டுத் தலைவரும் வரி செலுத்தாத வகையில், தற்போதைய நாட்டுத் தலைவர் மக்கள் மீது வரிகளைச் சுமத்தி பெருமிதம் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சித் தலைமையகத்தில் இன்று (02.11.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், நாட்டின் ஜனாதிபதியின் மனநிலை குறித்து பாரிய கேள்வி எழுந்துள்ளது என்றும், அரசியலமைப்பின் படி ஜனாதிபதி ஒருவர் மனநல குறைபாடு அல்லது சுயநினைவின்றி செயல்படும் போது அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வர முடியும் என்றும் குறிப்பிட்டார்.

கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மேதைமை அமைப்பின் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, தாம் ஆட்சிக்கு வந்த பின்னர் புதிய வரிகள் எதையும் அறிமுகப்படுத்தவில்லை என்றும், ஏற்கனவே இருந்த வரிகளையே தொடர்வதாகவும் கூறியுள்ளாரெனவும், நாட்டின் நிதியமைச்சராகவும் இருக்கும் ஜனாதிபதி இவ்வாறானதொரு பொய்யான பிரசாரத்தை முன்னெடுப்பது தீவிரமாக கவனிக்கப்பட வேண்டிய ஒன்று என்றும் அவர் தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பின்னர், ஜனாதிபதியினாலும் அவரது அரசாங்கத்தினாலும் 2025 இல் வாகனங்கள், மதுபானம், இனிப்பு பானங்கள் மற்றும் சிகரெட்டுகளுக்கு 6% புதிய வரி அறிமுகப்படுத்தப்பட்டதுடன், 2025 பெப்ரவரியில் மின்சார வாகனங்களுக்கான வரி 100% உயர்த்தப்பட்டு 20% இறக்குமதி வரியும் 50% கூடுதல் கட்டணமும் விதிக்கப்பட்டதாக சுட்டிக்காட்டினார்.

மேலும், 2025 ஏப்ரலில் தடுப்பு வரி 5% இலிருந்து 10% ஆகவும், மதுபானம், புகையிலை மற்றும் சூதாட்ட நிறுவனங்களுக்கான நிறுவன வரி 40% இலிருந்து 45% ஆகவும் உயர்த்தப்பட்டதுடன், வெளிநாட்டு சேவை வழங்குநர்களுக்கு 15% வரி புதிதாக விதிக்கப்பட்டது என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து குறிப்பிட்ட அவர், 2026 மே மாதத்தில் 2.5% சமூக பாதுகாப்பு வரி விதிக்கப்பட்டு வாகன இறக்குமதிக்கு 50% கூடுதல் கட்டணம் பாய்ச்சப்பட்டது என்றும், 2026 ஜூன் மாதத்தில் மூலதன லாப வரி தனிநபர்களுக்கு 10% இலிருந்து 15% ஆகவும், பரஸ்பர நிதிகளுக்கு 10% இலிருந்து 30% ஆகவும் உயர்த்தப்பட்டு கலைஞர்கள், புகைப்படக் கலைஞர்கள், தகவல் தொழில்நுட்ப நிபுணர்கள் போன்றோர் தடுப்பு வரிக்காக புதிதாக உள்ளடக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறினார்.

அத்துடன் 2026 ஜூலை மாதத்தில் டிஜிட்டல் சேவைகளுக்கு 18% VAT வரி விதிக்கப்பட்டதாகவும், இவ்வாறு மக்கள் மீது பாரிய வரிச் சுமையை ஏற்றிவிட்டு வரிகளை உயர்த்தவில்லை எனக் கூறுவது ஜனாதிபதியின் அறியாமையையே காட்டுகிறது என்றும் தெரிவித்தார்.

வரிகளை வசூலித்துவிட்டு வரவு செலவுத் திட்ட பற்றாக்குறை குறைந்துள்ளதாக அரசாங்கம் கூறுகிறதே தவிர, நாட்டில் எந்தவொரு அபிவிருத்தியும் நடைபெறவில்லை என்றும், முந்தைய தலைவர்கள் வரிப் பணத்தில் பாடசாலை ஆய்வகங்கள், பல்கலைக்கழக பீடங்கள் மற்றும் வைத்தியசாலை வார்டுகளை உருவாக்கிய போதிலும் கடந்த இரு ஆண்டுகளில் இந்த அரசாங்கத்தால் எந்தவொரு அபிவிருத்தி திட்டமும் முன்னெடுக்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.

மத்திய கிழக்கு யுத்தத்தினால் தான் பணவீக்கம் அதிகரித்துள்ளது என ஜனாதிபதி கூறுவது குறித்து கருத்து தெரிவித்த அவர், யுத்தத்தைக் காரணம் காட்டி பொருளாதாரத்தை நிர்வகிக்க முடியாத ஆட்சியாளர்கள் எதற்கு என முன்னதாகக் கேட்ட ஜனாதிபதியின் வார்த்தைகளே இன்று அவரையே திரும்பித் தாக்கியுள்ளதாகவும், எரிபொருள் விலை உயர்வு மற்றும் எரிவாயு தட்டுப்பாடு என்பன இந்த அரசாங்கத்தின் தோல்வியையே காட்டுகின்றன என்றும் கூறினார்.

இறுதியாக, எமது கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ நியாயமற்ற முறையில் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு எதிராக இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் நாட்டை விட்டு தப்பிச் சென்ற ஒருவரின் கூற்றை அடிப்படையாக வைத்து இரு மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளமை மூலம் நாமல் ராஜபக்ஷ என்ற இளம் தலைவரைக் கண்டு அரசாங்கம் எவ்வளவு பயப்படுகிறது என்பது தெளிவாகிறது என்றும் தெரிவித்தார்.

இன்று நாட்டில் சட்டத்தின் ஆட்சி சீர்குலைந்து பொலிஸ் நிலையங்களில் இளைஞர்கள் உயிரிழப்பதாகவும், நாட்டில் சர்வாதிகார ஆட்சியை ஏற்படுத்த அரசாங்கம் முயன்றாலும் ஜனநாயகத்தை நேசிக்கும் மக்கள் இந்த அடக்குமுறைகளுக்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டார்கள் என்றும் சாகர காரியவசம் மேலும் சுட்டிக்காட்டினார்

Related

Tags: No other head of state has ever imposed such taxes on the people – Sri Lanka Podujana Peramuna’s accusation!
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மலையக மக்களின் நலனுக்காக பல புரட்சிகரமான முன்னெடுப்புகள்: பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்

Related Posts

மலையக மக்களின் நலனுக்காக பல புரட்சிகரமான முன்னெடுப்புகள்: பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்
இலங்கை

மலையக மக்களின் நலனுக்காக பல புரட்சிகரமான முன்னெடுப்புகள்: பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்

2026-11-02
மத்திய மாகாணத்தில் சர்வதேச முதலீடுகளை ஈர்க்க புதிய முயற்சி!
இலங்கை

மத்திய மாகாணத்தில் சர்வதேச முதலீடுகளை ஈர்க்க புதிய முயற்சி!

2026-11-02
தீபாவளியின் போது டெல்லியில் பட்டாசுகளை வெடிக்க அனுமதி!
இந்தியா

தீபாவளியின் போது டெல்லியில் பட்டாசுகளை வெடிக்க அனுமதி!

2026-11-02
33 அரச நிறுவனங்களை கலைக்கும் நடவடிக்கை முன்னெடுப்பு!
இலங்கை

33 அரச நிறுவனங்களை கலைக்கும் நடவடிக்கை முன்னெடுப்பு!

2026-11-02
O/L பரீட்சை மாணவர்களுக்கான மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் கையேடு வெளியீட்டு நிகழ்வு!
இலங்கை

O/L பரீட்சை மாணவர்களுக்கான மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் கையேடு வெளியீட்டு நிகழ்வு!

2026-11-02
டெங்கு பாதிப்பு அதிகரிப்பு – 13 மாவட்டங்களில் விசேட தடுப்பு நடவடிக்கை!
இலங்கை

டெங்கு பாதிப்பு அதிகரிப்பு – 13 மாவட்டங்களில் விசேட தடுப்பு நடவடிக்கை!

2026-11-02

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

2026-10-10
கொழும்பு கிராண்ட்பாஸில் தீப்பரவல் – 15 தற்காலிக வீடுகள் முற்றாக அழிவு

கொழும்பு கிராண்ட்பாஸில் தீப்பரவல் – 15 தற்காலிக வீடுகள் முற்றாக அழிவு

2026-10-13
மிகக் கடுமையான சூறாவளியாக மாறிய ‘அர்னாப்’ – பலத்த மழை எச்சரிக்கை!

மிகக் கடுமையான சூறாவளியாக மாறிய ‘அர்னாப்’ – பலத்த மழை எச்சரிக்கை!

2026-10-27
எந்தவொரு நாட்டுத் தலைவரும் மக்கள் மீது இவ்வாறு வரி சுமத்தியதில்லை – ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன குற்றச்சாட்டு!

எந்தவொரு நாட்டுத் தலைவரும் மக்கள் மீது இவ்வாறு வரி சுமத்தியதில்லை – ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன குற்றச்சாட்டு!

0
மலையக மக்களின் நலனுக்காக பல புரட்சிகரமான முன்னெடுப்புகள்: பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்

மலையக மக்களின் நலனுக்காக பல புரட்சிகரமான முன்னெடுப்புகள்: பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்

0
மத்திய மாகாணத்தில் சர்வதேச முதலீடுகளை ஈர்க்க புதிய முயற்சி!

மத்திய மாகாணத்தில் சர்வதேச முதலீடுகளை ஈர்க்க புதிய முயற்சி!

0
தீபாவளியின் போது டெல்லியில் பட்டாசுகளை வெடிக்க அனுமதி!

தீபாவளியின் போது டெல்லியில் பட்டாசுகளை வெடிக்க அனுமதி!

0
ஹார்முஸ் நீரிணையில் தீப்பற்றி எரியும் எண்ணெய் கப்பல்!

செண்பகவல்லி அம்மன் தேரோட்டம் – நான்கு ரத வீதிகளிலும் உலா!

செண்பகவல்லி அம்மன் தேரோட்டம் – நான்கு ரத வீதிகளிலும் உலா!

2026-11-02
தீபாவளியின் போது டெல்லியில் பட்டாசுகளை வெடிக்க அனுமதி!

தீபாவளியின் போது டெல்லியில் பட்டாசுகளை வெடிக்க அனுமதி!

2026-11-02
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: