தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, டெல்லி மற்றும் அதனைச் சூழ்ந்துள்ள தேசிய தலைநகர் பிராந்தியப் (Delhi-NCR) பகுதியில் நவம்பர் 7 மற்றும் 8 ஆகிய திகதிகளில் காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 8 மணி முதல் 10 மணி வரையிலும், சான்றளிக்கப்பட்ட ‘பசுமை’ பட்டாசுகளை விற்பனை செய்யவும் வெடிக்கவும் இந்திய நீதிமன்றம் இன்று (02) அனுமதி அளித்தது.
அதேவேளையில், நவம்பர் 9 ஆம் திகதி முதல் பட்டாசுகளுக்கு மீண்டும் முழுமையான தடை அமுலுக்கு வரும் என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.
அத்துடன், மருத்துவமனைகள், நர்சிங் ஹோம்கள், ஆரம்ப மற்றும் மாவட்ட சுகாதார மையங்கள், முதியோர் இல்லங்கள் மற்றும் அறிவிக்கப்பட்ட அமைதி மண்டலங்களைச் சுற்றியுள்ள 300 மீட்டர் சுற்றளவிற்குள் பட்டாசுகளை வெடிக்கக்கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தத் தடைகள் குறித்து பொதுமக்களுக்குத் தெளிவாகத் தெரியப்படுத்தும் வகையில், உரிய அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட வேண்டும் மற்றும் பொது அறிவிப்புகள் செய்யப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
















