முரசு’ (Murasu) சூறாவளி காரணமாக இன்று (02) சென்னை விமான நிலையத்திற்கு வருகை தரும் மற்றும் அங்கிருந்து புறப்படும் மொத்தம் பதினொரு விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த வளிமண்டல அமைப்பு தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரையில் ஓங்கோல் அருகே ஒரு தீவிர சூறாவளி புயலாகக் கரையை கடக்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.
அப்போது காற்றின் வேகம் மணிக்கு 100 முதல் 110 கி.மீ. ஆகவும், அவ்வப்போது 120 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும் என்றும் அது எச்சரித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை (01) வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ‘முரசு’ என்று பெயரிடப்பட்ட சூறாவளியாக வலுவடைந்தது.
இந்தச் சூறாவளி, நவம்பர் 3 ஆம் திகதி காலை ஆந்திரப் பிரதேசத்தின் நெல்லூருக்கும் நரசபூருக்கும் இடையே கரையைக்கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கனமழை காரணமாக, சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள பாடசாலைகள் மற்றும் கல்லூரிகளுக்கு திங்கள்கிழமை (02) விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
தெலுங்கானாவில் திங்கள் அன்று ஆறு மாவட்டங்களுக்கு ‘செம்மஞ்சள்’ எச்சரிக்கையும், ஐந்து மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
















