திருகோணமலை-குச்சவெளி பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் பப்பாசி பயிர்ச் செய்கையை, பெரும்பாலான விவசாயிகள் முன்னெடுத்து வருகின்றனர்.
திருகோணமலையிலுள்ள நிலாவெளி, இறக்கக்கண்டி, கும்புறுபிட்டி ஆகிய பகுதிகளில் குறித்த பயிர்ச் செய்கை அதிகளவு முன்னெடுக்கப்படுகின்றது.
எனினும் கொரோனா அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள குறித்த சூழ்நிலையில், விளைபொருட்களை சந்தைப்படுத்த முடியாமல் விவசாயிகள் மிகவும் கவலையில் உள்ளனர்.
திருகோணமலை சந்தையில் பப்பாசிக்கு கேள்வி நிலவிய காலப்பகுதியில் 1 கிலோவுக்கு 100 ரூபாய் விற்பனை செய்யப்பட்டதாகவும் தற்போது 10 ரூபாய்க்கு கூட விற்பனை செய்யமுடியாமல் இருப்பதாகவும் பயிர்ச் செய்கைகளை கைவிட நேர்ந்துள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
தம்புள்ளை மொத்த சந்தை மூடப்பட்டமை மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வருகை இடை நிறுத்தப்பட்டமை, விருந்துபசார நிலையங்கள் மற்றும் விடுதிகள் மூடப்பட்டமை ஆகியவை காரணங்களினாலேயே விளைச்சலை சந்தைப்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.