கொரோனா தொற்றில் இருந்து மீளும் சிறுவர்களுக்கு பல்லுறுப்பு வீக்க நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சிறார் நல மருத்துவர், கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து மீண்ட சிறுவர்களின் உடலில் நோய் எதிர்பொருளான ஆன்டிஜென் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது.
அதன்காரணமாக அவர்களுக்கு பல்லுறுப்பு வீக்க நோய் ஏற்படுகிறது.
இந்த நோய் ஏற்பட்டால் இதயம், கல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்புகளில் வீக்கம் ஏற்படும். பல்லுறுப்பு வீக்க நோய் உயிர் பறிக்கும் நோய் அல்ல.
எனினும் அந்த நோயால் சிறார்கள் பெரும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.
கொரோனா தொற்றில் இருந்து சிறுவர்கள் மீண்ட 4 முதல் 6 வாரங்களுக்குப் பிறகு பல்லுறுப்பு வீக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.