கொழும்பு உள்ளிட்ட வெளி மாவட்டங்களிலிருந்து நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவிற்குள் வருகை தந்தவர்களுக்கு பீ.சீ.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதேபோன்று கொரோனா தொற்றின் மூன்றாம் அலையில் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்களுடன் தொடர்பினை பேணியவர்களுக்கும் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாவிதன்வெளி பிரதேசத்தில் 4 பேர் கொரோனா வைரஸ் தொற்றாளராக அண்மையில் அடையாளம் காணப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்தே நாவிதன்வெளி – 1 , அன்னமலை – 1 , மத்திய முகாம் – 1, மத்தியமுகாம- 6 ஆகிய கிராமசேவை உத்தியோகத்தர் பிரிவுகளிலுள்ள 45 பேருக்கு பீ.சீ.ஆர்.பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, அதன் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் வீ.வினோதினி தலைமையிலான பொதுச் சுகாதார பரிசோதகர்களான ஏ.எச்.எம்.ஜாபீர், ஏ.எம்.றம்ஸீன், பற் சிகிச்சையாளர் எல்.ஜெஸ்மின் நகார் உள்ளிட்ட சுகாதார உத்தியோகத்தர்கள் வீடு வீடாக சென்று பீ.சீ.ஆர் பரிசோதனையை மேற்கொண்டனர்.
இதேவேளை .நாவிதன்வெளி பிரதேசத்திலுள்ள பொது மக்களிடையே கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்குடன், அவர்கள் சேவை பெற வருகை தரும் பகுதிகளில் தொற்று நீக்கி விசுறும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.