கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத் தடை காரணமாக வாழ்வாதாரத்தினை இழந்த வறுமையில் வாடும் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) வழங்கி வைக்கப்பட்டன.
அன்றாடம் கூலி வேலை செய்பவர்கள், பெண் தலைமைத்துவ குடும்பங்கள் ஆகியவற்றுக்கு இந்த உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் பணிப்பிற்கு அமைய, தமிழீழ விடுதலை இயக்கம் டெலோவின் மன்னார் மாவட்ட அலுவலகத்தினால் இந்த உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இதன்போது முதல் கட்டமாக சவிரி குளம், வங்காலை, தலைமன்னார் பியர் போன்ற பகுதிகளில் வசிக்கும் 107 குடும்பங்களுக்கு 1500 ரூபாய் பெறுமதியான உலர் உணவு பொதிகளை வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் செயலாளர் டானியல் வசந்த் வழங்கி வைத்தார்.