கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பு காராணமாக ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் ஒரு வாரத்திற்கு முடக்க கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
ரஷ்யாவில் கடந்த ஒரு நாளில் 13 ஆயிரத்து 510 பேருக்கும், அதிகபட்சமாக மொஸ்கோவில், 6 ஆயிரத்து 701 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
கடந்த பெப்ரவரி மாதத்திற்கு பின் அங்கு மீண்டும் பரவல் அதிகரித்துள்ள நிலையில் முடக்க கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு காலத்தில் மதுபான நிலையங்கள், உணவகங்கள் என அனைத்தும் மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் வயதானவர்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் இருக்கவும், அதிவிரைவாக மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக யுரோ கால்பந்து போட்டிகளில் இரசிகர்களை அனுமதிப்பதா என்ற சர்ச்சையும் ஏழுந்துள்ளது.