எரிபொருட்களின் விலைகளை திருத்தம் செய்வது தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் ஆராயப்படவுள்ளதாக ஆளும் கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 11ஆம் திகதி நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டன.
எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு எதிராக பல்வேறுப்பட்ட தரப்பினராலும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதனைக் கருத்திற் கொண்டே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டம் நாளை பிற்பகல் 5 மணியளவில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.