ரஷ்யாவின் மிகப்பெரிய கப்பல் கட்டுமான நிறுவனமான யுனைடெட் ஷிப் பில்டிங் கோர்ப்பரேஷனுக்கு எதிராகப் பிரித்தானியா தடைகளை விதித்துள்ளது. (United Shipbuilding Corporation)
கிரிமியாவில் (Crimea) பயன்படுத்தப்பட்ட போர்க்கப்பல்களை இந்த நிறுவனம் வழங்கியதாகவும், ரஷ்யாவின் பாதுகாப்புத் துறையில் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாகச் செயற்படுவதாகவும் பிரித்தானியாவின் வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், ரஷ்யாவுடன் தொடர்புடைய 645 தனிப்பட்ட கப்பல்களும் பிரித்தானியாவின் தடைகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
இந்தத் தடைகளின் கீழ், குறிப்பிட்ட கப்பல்கள் பிரித்தானியத் துறைமுகங்களுக்குள் நுழைவதைத் தடுக்கவும், அவற்றைத் தடுத்து நிறுத்தவும், அவற்றின் பதிவு தொடர்பில் நடவடிக்கை எடுக்கவும் முடியும்.
உக்ரைனின் இறையாண்மையையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் பாதிக்கும் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தத் தடைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

















