பிரதமர் பொரிஸ் ஜோன்சன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை தென்னாபிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
கொரோனா தொற்றை எதிர்த்துப் போராட ஆபிரிக்காவுக்கு உதவும் முயற்சிகளில் கவனம் செலுத்துமாறு ஜி 7 நாடுகளிடம் ரமபோசா வலியுறுத்தினார்.
நாங்கள் உயிரைக் காப்பாற்றி, தொற்றை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமானால், உற்பத்தியை விரிவுபடுத்தி, பன்முகப்படுத்த வேண்டும் என சிரில் ரமபோசா தெரிவித்தார்.
மேலும் தொற்று உறுதியாகிய மக்களுக்கு சிகிச்சையளிக்கவும், போராடவும், தடுக்கவும் மருத்துவ தயாரிப்புகளைப் பெற வேண்டும் என்றும் அவர் நேற்று கூறியிருந்த நிலையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.