கொரோனா அச்சுறுத்தலான சூழ்நிலையினால் வறுமையில் வாடும் மக்களை, மேலும் சுமைக்குள் தள்ளும் செயற்பாடுகளையே அரசாங்கம் முன்னெடுக்கின்றது என கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் இரா.துரைரெட்னம் தெரிவித்துள்ளார்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் இரா.துரைரெட்னம் மேலும் கூறியுள்ளதாவது, ‘பெற்றோல் விலையேற்றத்தினால் பொருட்களின் விலையும் அதிகரிக்ககூடிய நிலைமை காணப்படுகின்றது.
ஆகவே பெற்றோல் விலை அதிகரிப்பு தொடர்பாக, தெளிவான நிலைப்பாட்டை அரசாங்கம் அறிவிக்க வேண்டும்.
மேலும் மக்கள் வாழ்வா சாவா என போராடிவரும் நிலையில், பொருளாதார ரீதியான சுமையினை அவர்கள் மீது சுமத்துவதை வன்மையாக கண்டிக்கின்றோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.