ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவின் ‘மஜ்மா நகரில்’ அமைந்துள்ள கொரோனா மையவாடியில் இதுவரையில் 934 கொரோனா சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.
ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.நௌபர் இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, 883 முஸ்லிம்களின் சடலங்களும் 22 இந்துக்களின் சடலங்களும் 14 கிறிஸ்தவர்களின் சடலங்களும் 13 பௌத்தர்களின் சடலங்களும் 02 வெளிநாட்டவர்களின் சடலங்கள் அங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டவர்களில் ஒருவர் இந்தியர் எனவும் ஏனையவர் நைஜீரியாவை சேர்ந்தர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வதற்கு இலங்கையில் முன்னதாக தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.