சட்ட விரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட ஒரு தொகுதி உலர்ந்த மஞ்சள் மூட்டைகளை இன்று(வியாழக்கிழமை0 மன்னார் பெரியகடை கடற்கரை கலப்பு பகுதியில் வைத்து இராணுவத்தினர் மீட்டுள்ளனர்.
மன்னார் இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் விரைந்து செயல்பட்ட இராணுவத்தினர் மன்னார் பெரியகடை கடற்கரை கலப்புப் பகுதியில் வைத்து 18 மூட்டைகளில் பொதி செய்யப்பட்ட 672 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் மூட்டைகளை கைப்பற்றியுள்ளனர்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய வள்ளங்கள் 3 மற்றும் பட்டா ரக வாகனமும் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளமு. சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.