எரிபொருள் விலை உயர்வுக்கு ஜனாதிபதி பொறுப்பேற்ற போதிலும் அமைச்சர்கள் சிலர் தெரிவிக்கும் கருத்துக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கை இல்லை என்பதைக் காட்டுகிறது என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
எரிபொருள் விலை உயர்வு தொடர்பாக போக்குவரத்து அமைச்சர் காமினி லொக்குகே நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்த கருத்திற்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மஹிந்த ராஜபக்ஷ ஒருபோதும் எரிபொருள் விலையை உயர்த்துவதற்கான திட்டத்தை கொண்டு வரவில்லை என்றும் எரிபொருள் விலையை அதிகரிக்க ஜனாதிபதி முன்மொழியவில்லை என்றும் காமினி லொக்குகே தெரிவித்தார்.
எரிபொருள் விலை உயர்வு தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவையின் வாழ்க்கைச் செலவுக் குழு கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டதாக உதய கம்மன்பில குறிப்பிட்டார்.
ஆகவே அரச தலைவர் அத்தகைய அறிக்கையை வெளியிட்ட பின்னர் அது உண்மையா என ஆராய தேவையில்லை என்றும் உதய கம்மன்பில தெரிவித்தார்.