வேல்ஸ் இப்போது அனைத்து கொவிட் கட்டுப்பாடுகளையும் முடிவுக்குக் கொண்டுவரும் நேரம் இதுவென தொற்று நோய்கள் குறித்த முன்னணி நிபுணரான பேராசிரியர் ஜோன் வாட்கின்ஸ் தெரிவித்துள்ளார்.
கொவிட் தொற்றுகள், மருத்துவமனையில் சேர்க்கப்படுதல் மற்றும் இறப்புகள் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு உடைந்து விட்டதாக பேராசிரியர் ஜோன் வாட்கின்ஸ் கூறியுள்ளார்.
வேல்ஷ் அரசாங்கம் கொவிட் விதிகளில் ஏதேனும் மாற்றங்கள் இருப்பின், அதனை புதன்கிழமை தனது அடுத்த மதிப்பாய்வில் அறிவிக்கும்.
பொது சுகாதார வேல்ஸின் சமீபத்திய தரவு, வேல்ஸில் கொவிட் தொற்று வீதங்கள் 100,000 பேருக்கு 127 தொற்றுகள் ஆகும். இது மற்ற பிரித்தானிய நாடுகளுடன் ஒப்பிடும் போது மிக்ககுறைவு.
கொவிட் உடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் குறைந்த அளவிற்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முக்கியமான கவனிப்பில் இருப்பவர்களின் எண்ணிக்கையும் மிகக் குறைவு.