சில நிபந்தனைகளுடன் ஸ்கொட்லாந்தில் முடக்க கட்டுப்பாடுகள் திங்கட்கிழமை முதல் தளர்த்தப்படும் என நிக்கோலா ஸ்டர்ஜன் கூறியுள்ளார்.
இருப்பினும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் அந்த கட்டுப்பாடு கட்டாயமாகப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்குவது மக்களை அதிக அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கும் என்றும் நிக்கோலா ஸ்டர்ஜன் சுட்டிக்காட்டினார்.
ஸ்கொட்டிஷ் பாராளுமன்றத்தில் பேசிய அவர், டெல்டா மாறுபாட்டை எதிர்கொள்ளும் விதத்தில் கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான முடிவு செய்யப்பட்டது என கூறினார்.
ஸ்கொட்லாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,529 புதிய கொரோனா தொற்று நோயாளிகளும் நான்கு புதிய இறப்புகள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.