ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ, எதிர்வரும் செப்டெம்பர் முதலாம் திகதி வரை கைது செய்யப்படமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக சட்டமா அதிபர் இன்று (புதன்கிழமை) உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக தம்மை கைது செய்வதை தடுக்குமாறு உத்தரவிடக் கோரி ஹரின் பெர்னாண்டோ அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்திருந்தார்.
குறித்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.