பொருட்களின் விலையேற்றம் மற்றும் எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியினரால் திருகோணமலையில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
திருகோணமலையில் உள்ள சண்டிபே பகுதியில் நடைபெற்ற குறித்த ஆர்ப்பாட்டத்தில் பெருமளவிலான மீனவர்கள் பங்கேற்றிருந்தனர்.
எரிபொருள் விலை, அத்தியாவசிய தேவைகளுக்கான பொருற்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துச்செல்லும் நிலையில், அரசு இவற்றை குறைக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
இலங்கையின் சுற்றுச்சூழலானது நாளுக்கு நாள் மாசுபடுவதுடன் குறிப்பாக திருகோணமலை கடற்பிராந்தியங்களில் அபிவிருத்தி என்ற போர்வையில் முன்னெடுக்கப்படும் சட்டவிரோத கட்டுமாணப் பணிகளுக்கும் எதிர்ப்புத் தெரிவித்து குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கையில் தீப்பந்தங்களையும் ஏந்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.