மனித உரிமை ஆணைக்குழு தங்களை அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுமாறு விலை பேசுவதாக மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
இன்று (வெள்ளிக்கிழமை) காலை, மன்னார் பஜார் பகுதியில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி இம்மானுவேல் உதயச்சந்திரா, எங்களது தொடர்ச்சியான போராட்டத்திற்கு அரசாங்கத்தினால் இதுவரை எந்ததொரு பதிலும் கிடைக்கவில்லை.
இலங்கை அரசாங்கம் இதற்கான தீர்வை வழங்காது என்பதினால்தான் சர்வதேச விசாரணை வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து வருகிறோம்.
இதேவேளை மனித உரிமை ஆணைக்குழு, இன்று எங்கள் ஒவ்வொருவருக்கும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுமாறு விலை பேசுகின்றனர்.
அரசாங்கத்துடன் இணைவதினால் எங்களுக்கு எந்த நன்மையும் இல்லை என்பதால்தான் நாங்கள் தனித்து போராடுகின்றோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.