அரச ஊழியர்களை மீண்டும் பணிக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ள அரசாங்கத்தின் தீர்மானத்தை மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
குறித்த தீர்மானத்தின் போது அதிகாரிகள் ஒரு முக்கியமான விடயத்தை கவனத்திற் கொள்ளாமல் விட்டுள்ளதாக குறித்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.
பெரும்பாலான அரச ஊழியர்கள் தடுப்பூசியின் முதல் டோஸை மாத்திரமே செலுத்திக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு பணிக்குவருபவர்களின் வீட்டில் உள்ளவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளார்களா என்பது தெரியவில்லை எனவே எதிர்காலத்தில் நிலமை மாறலாம் எனவும் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.