கிரேக்கத்தின் நிசிரஸ் தீவுக்கு 23 கி.மீ. வடமேற்கே, 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக, ஏதென்ஸை தளமாகக் கொண்ட ஜியோடைனமிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நடுக்கம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) உள்ளூர் நேரப்படி காலை 7:31 மணிக்கு 15.6 கிலோமீட்டர் (9.7 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
அத்துடன் இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் 1,000பேர் வசிக்கும் நிசிரஸ் தீவிலும் துருக்கியின் கடலோரப் பகுதிகளிலும் உணரப்பட்டன.
முக்லா மாகாணத்தில் உள்ள துருக்கிய கடலோர நகரமான டாட்காவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. துருக்கியின் அவசரநிலை மற்றும் பேரிடர் ஆணையம், நிலநடுக்கம் 5.5 ரிக்டர் அளவில் பதிவானதாகவும் எந்த சேதமும் ஏற்படவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக, சனிக்கிழமை பிற்பகுதியில் மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பத்தில், முறையே 4.7 மற்றும் 4.1 ஆகிய இரண்டு நிலநடுக்கங்கள் பதிவாகியிருந்தன.