அண்டை நாடுகளை சேர்ந்த சிறுபான்மையின மக்களுக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்கும் விதமாக, குடியுரிமை திருத்த சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசு எண்ணவில்லை என மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து ராஜ்யசபாவில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் வழங்கிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ‘குடியுரிமை திருத்த சட்டத்திற்கான விதிகளை வரையறுக்க, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரை மத்திய உள்துறை அமைச்சகம் கால அவகாசம் கோரியுள்ளது.
விதிகள் வரையறுக்கப்பட்டப்பின், இந்த சட்டம் நடைமுறைக்கு வரும், அதன் பிறகே தகுதியானவர்கள் குடியுரிமை கோரி விண்ணப்பிக்க முடியும்.
அண்டை நாடுகளை சேர்ந்த மேலும் சில சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் விதமாக சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளும் எண்ணம் அரசுக்கு இல்லை’ எனத் தெரிவித்தார்.