கொத்தலாவல சட்டத்தை முழுமையாக எதிர்ப்போம் என தெரிவித்து ஹட்டன் நகரில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
கொத்தலாவல பிரேரணைக்கு எதிரான கூட்டு நிலைய செயற்பாட்டளர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணியை இன்று முன்னெடுத்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆசிரியர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என நூற்றுக்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.
இவர்கள் தங்களது கோரிக்கைகளை பதாதைகள் ஊடாக வெளிப்படுத்தி அதை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி பேரணியாகச் சென்றனர்.
அதன்பின்னர் ஹட்டன் நகர மத்தியில் அமைந்துள்ள மணிக்கூட்டு கோபுரத்துக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது கொத்தலாவல சட்ட மூலத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பியதுடன், ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் போராட்டங்கள், கைது நடவடிக்கைகள் ஆகியவற்றை குறிப்பிட்டு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் முழக்கங்களை எழுப்பினர்.