கொத்தலாவல சட்டமூலம் மற்றும் சம்பள முரண்பாடு உள்ளிட்ட விவகாரங்களை முன்னிறுத்தி பருத்தித்துறையில் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.
இன்று (திங்கட்கிழமை) காலை 11 மணியளவில் பருத்தித்துறை பேரூந்து நிலையத்தில் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வடமராட்சி வலய இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சங்கம் ஆகியன இணைந்து அதிபர்கள், ஆசிரியர்கள் தொழிற்சங்கமாகவே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், நாம் சம்பள உயர்வை கேட்கவில்லை எமது சம்பளத்தையே கேட்கிறோம், பிள்ளைகளின் கல்வியை சிதைக்காதே கல்வியை உறுதிப்படுத்து, ஆசிரியர் மற்றும் அதிபர் சம்பள முரண்பாட்டை தீர்த்துவை, இலங்கை கல்வியை இராணுவ மயமாக்காதே உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து குறித்த போராட்டம் இடம்பெற்றது.
பருத்தித்துறை நகரிலிருந்து பேரணியாக ஆரம்பமாகிய போராட்டம், பருத்தித்துறை நவீன சந்தை சுற்று வீதியால் பேருந்து தரிப்பு நிலையத்தை வந்தடைந்து நிறைவுபெற்றமை குறிப்பிடத்தக்கது.