கிளிநொச்சி குளத்தினை சுற்றுலாத்தளமாக அமைப்பது தொடர்பான கலந்துரையாடலொன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடல் இன்று காலை 9 மணியளவில் பூநகரியில் இடம்பெற்றது.
அண்மையில் குறித்த திட்ட வரைபு, இரணைமடு நீர்பாசன பொறியியலாளர் செந்தில்குமரனால் வழங்கப்பட்ட நிலையில் சமூக மட்டத்தில் பெரும் வரவேற்பு கிடைத்தது.
குறித்த அபிவிருத்தி தொடர்பாக இன்றைய தினம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் அனுராதா ஜயரத்ன, இராஜாங்க அமைச்சர் அனுராத லங்கா ஜெயரட்ணவின் இணைப்பு செயலாளர் சுமுது, கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு இணை தலைவர் தவநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடினர்.
குறித்த குளத்தினை சுற்றுலாத்தளமாக அபிவிருத்தி செய்து மக்களின் பொழுதுபோக்குத் தளமாக மாற்றுவதற்கும் மாவட்டத்திற்கு வருமானத்தை ஏற்படுத்தும் வகையிலும்கூடிய திட்டத்தை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.