யாழ்ப்பாணத்திலும் இராணுவத்தினரின் நடமாடும் தடுப்பூசி வழங்கும் திட்டம், இன்று (வியாழக்கிழமை) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் குறித்த வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதில், இராணுவத்தில் 512 ஆவது பிரிகேட் பிரிவுக்குட்பட்ட 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், வீடுகளுக்கு சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.
நாடளாவிய ரீதியில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் நடமாடும் தடுப்பூசி வழங்கும் வேலைத் திட்டத்தின் ஒரு அங்கமாக, யாழ்ப்பாணத்திலும் குறித்த வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் யாழ்.மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கொடித்துவக்கு, யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர், வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் உயர் அதிகாரி, யாழ்.மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் சுகாதாரப் பிரிவினர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.