தனிமைப்படுத்தல் ஊரடங்கு காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்துள்ளவர்களுக்கு 2000 ரூபாய் நிவாரண கொடுப்பனவு வழங்கும் திட்டத்தை இன்று (திங்கட்கிழமை) முதல் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான சுற்றுநிருபம் நேற்று வெளியிடப்பட்ட நிலையில், அரசாங்கத்தினால் வழங்கப்படும் எந்தவொரு கொடுப்பனவையும் இதுவரை பெறாத குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு மாத்திரமே இந்த கொடுப்பனவு வழஙக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அரச சேவையாளர்கள், ஓய்வூதியம் பெறுவோர், சமூர்த்தி, முதியோர் கொடுப்பனவுகளை பெறுவோர் விசேட தேவையுடையோர் ஆகிய அரசாங்க கொடுப்பனவுகளை பெறுவோருக்கு இந்த நிவாரணம் வழங்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.