ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலிருந்து தங்கள் நாட்டவர்களையும் பிறரையும் பாதுகாப்பாக வெளியேற்றும் தங்களது பணி நிறைவுப் பெறுவதாக பிரான்ஸ் அறிவித்துள்ளது.
இந்த நடவடிக்கை இன்று (வெள்ளிக்கிமை) நிறுத்தப்படும் என பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘வெள்ளிக்கிழமை மாலைக்குள் தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ள காபூலில் இருந்து ஆபத்தில் உள்ள பிரான்ஸ் நாட்டினரையும் ஆப்கானிஸ்தானையும் வெளியேற்றும் நடவடிக்கையை பிரான்ஸ் முழுமையாக முடித்துவிடும்.
வெள்ளிக்கிழமைக்குப் பிறகு காபூல் விமான நிலையத்திலிருந்து மக்களை வெளியேற்றும் பணியை எங்களால் தொடர இயலாது.
நாங்கள் நீண்டநாளைக்கு காபுல் விமான நிலையத்தில் இருந்து அகதிகளை வெளியேற்ற முடியாது’ என கூறினார்.
இராணுவம் மற்றும் மீதமுள்ள தூதரக சேவைகள் வெளியேறும்போது, பணியின் முறையான முடிவுக்கு பல மணிநேரங்களுக்கு முன்பு பொதுமக்களை வெளியேற்றுவது முடிவடையும் என்று கூறி, பிரான்ஸ் அதன் செயல்பாட்டை இன்னும் பல மணிநேரங்களுக்கு முடிந்தவரை செய்ய எல்லாவற்றையும் செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதுவரை ஆப்கானிஸ்தானில் இருந்து 2500பேர் தலைநகர் பரிஸிக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.
இவர்களில் பலர் காபுல் நகரை தலிபான்கள் கைப்பற்றும் முன்னர் அழைத்து வரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.