நியூசிலாந்தில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் மக்கள் மீது தாக்குதலை நடத்திய நிலையில் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டவர் மட்டக்களப்பு காத்தான்குடியை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நியூசிலாந்தின் ஓக்லாந்திலுள்ள விற்பனை நிலையமொன்றில் மக்கள் மீது தாக்குதல் நடாத்திய குறித்த நபர், ஐ.எஸ். அடிப்படைவாத கொள்கைகள் கொண்ட இலங்கையர் எனவும் இது தீவிரவாத தாக்குதல் எனவும் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டவர், மட்டக்களப்பு- காத்தான்குடி முதலாம் வட்டாரத்தினை சேர்ந்த முகமட் சம்சுதீன் ஆதில் என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் எட்டு வயதிலேயே கொழும்புக்குச் சென்று அங்கு கொழும்பு இந்துக்கல்லூரியில் கல்வி கற்றுள்ளதாகவும் பின்னர் 2011ஆம் ஆண்டு நியூசிலாந்து சென்றுள்ளதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மற்றும் குற்றப்புலனாய்வுத்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.