அமெரிக்கா, மெக்ஸிகோ மற்றும் கனடா இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் இணைவதற்கான முயற்சிகள் குறித்து பிரித்தானிய அமைச்சர்கள் பரிசீலித்து வருகின்றனர்.
இங்கிலாந்து-அமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தற்கான உடனடி வாய்ப்புக்கள் இல்லை என பிரதமர் பொரிஸ் ஜோன்சன் ஒப்புக்கொண்ட நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தவாரம் நியூயோர்க் மற்றும் வொஷிங்டன் டிசிக்கு விஜயம் செய்த பிரதமர், 2024 இல் அடுத்த பொதுத் தேர்தலின் போது பிரிட்டனுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே ஒரு சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை உறுதி செய்ய தவறிவிட்டார்.
அட்லாண்டிக் டிரான்ஸ் வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான மாற்றுப் பாதையாக தற்போதுள்ள சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் பிரித்தானியா இணைவைத்தான் மூலம் ஏற்படுத்திக் கொள்ளலாம் என மூத்த அரசாங்கப் பிரமுகர் பரிந்துரைத்துள்ளார்.
இருப்பினும் தனித்தனி பிரச்சினைகளை திருத்திக்கொண்டு பிரித்தானியா-அமெரிக்க ஒப்பந்தங்களைத் தொடர்வது மற்றொரு விருப்பமாக இருக்கலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.