வவுனியா மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்கள், விவசாயிகள், வவுனியா மாவட்ட கமநல சேவை நிலையங்களின் நிதிப்பங்களிப்பில் வவுனியா பொது வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணங்கள் இன்று (வியாழக்கிழமை) வழங்கிவைக்கப்பட்டது.
கொரோனா தொற்று நோயாளர்கள் அதிகரித்து வரும் நிலையில் அதனை கருத்தில் கொண்டு குறித்த உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.
அந்தவகையில் 10 ஒட்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் மூன்று கட்டில்கள் என 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் இதன்போது வழங்கிவைக்கப்பட்டது.
குறித்த உபகரணங்களை கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் உதவி ஆணையாளர் விஸ்னுதாசன் வவுனியா வைத்தியசாலை பணிப்பாளர் க.ராகுலனிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்