இந்தியாவிலும் உலகெங்கிலும் வைரலாகப் பரவிய “மணிகே மகே ஹிதே” பாடலை பாடிய இலங்கை பாடகி யோஹானி, பிரபல இந்திய திறமை நிறுவனத்துடன் ஒப்பந்தமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதாவது, விங்மேன் இந்திய கலைஞராக பிரத்யேகமாக பாடகி யோஹானி கையெழுத்திடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
விங்மேன் டேலண்ட் மேனேஜ்மென்ட் பாலிவுட்டின் மிகப் பெரிய பிரபலங்களை நிர்வகிக்கிறது. சோங்கு லக்வானி விங்மேன் திறமை நிர்வாகத்தின் நிறுவனர் ஆவார்.
மேலும் மணிகே மகே ஹிதே தற்போது உலக தரவரிசையில் முதல் 10 இடங்களில் உள்ளது.
இந்த வாரம் யூடியூப் உலக தரவரிசையில் இலங்கை பாடல் 7 வது இடத்தில் உள்ளது. இந்த பாடல் கடந்த வாரம் 6 வது இடத்தில் இருந்தது.
யூஹானி மற்றும் சதீஷனின் ‘மணிகே மகே ஹிதே’ யூடியூபில் 119 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.
நடிகர் அமிதாப் பச்சன் இந்த பாடலின் ஹிந்தி பதிப்பிற்கு நடனமாடும் காணொளியை பகிர்ந்து இந்தியாவின் கவனத்தை ஈர்த்த பின்னர், இந்த பாடல் உலகம் முழுவதும் பிரபலமடைந்தமை குறிப்பிடத்தக்கது.